கல்வி என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் உள வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளை முறையாக வழி நடத்துவதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
இந் நிறுவனமானது பிள்ளைகளின் அறிவு,திறன், மனப்பாங்கு ஆகியவற்றை வளர்த்து வளமான எதிர்கால்த்திற்காக ஒரு புதிய சமுதாயத்தை தோற்றிவித்து பண்பாடு, கலாசாரம், நடத்தை போன்ற அம்சங்களையும் ஊட்டி பிள்ளையை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடையச் செய்கின்றது.
பிள்ளை தனது வகுப்பறையில் கற்கின்ற பாடப்பொருளினை முழுமையாக புரிந்து கொள்ளவதும் அதனை எளிதாக விளங்கிக் கொள்வதற்கும் உதவி செய்வது ஆசிரியரின் தலையாய கடமையாகும். இதன்போது மாணவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவனது, அறிவு, திறன், மனப்பாங்கு என்பன அளவிடப்படுகிறது.
கற்பித்தல் ஓரு விஞ்ஞானம் போன்ற ஒரு கலையாகும். ஆகையினால் ஆசிரியரானவர் தனக்கு சிறந்ததைவிட மாணவனுக்கு எது சிறந்த கற்பித்தல் முறையாக அமையுமென தேர்ந்தெடுத்துக்கொள்ளல் ஆசிரியரின் கட்டாயக் கடமை என்றும் கூறலாம். பாடம் ஒன்றினைக் கற்பிப்பதன் நோக்கம் எதிர்காலத்தில் அவ்விடயம் தொடர்பாக மாணவர்களிடம் எழுகின்ற சவால்;களை களைவதாக அமைதல் வேண்டும்.
இதன் போது வகுப்பறையில் மாணவனிடத்தில் காணப்படும் இயல்பு, பாடத்தின் தன்மை, பௌதிக, சுற்றுச் சூழலின் தன்மை, பணன்படுத்தக் கூடிய கட்புல,செவிப்புல சாதனங்கள், அச்சாதனங்கள் தொடர்பாக ஆசிரியரின் நிலைப்பாடு, ஆசிரியரின் மனநிலை மற்றும் சிந்தனை அகிய அனைத்து விடயங்களிலும் கவனம் வேண்டும். அந்த வகையில் எளிமையானதும் உறுதியானதுமான வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன.
எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாட அலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும். அந்தவகையில்
கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்
1.விரிவுரை முறை கற்பித்தல்
2.குழுமுறைக் கற்பித்தல்
3.வினாவிடை முறைக்கற்பித்தல்
4.கூட்டுமுறைக்கற்பித்தல் - பல்தரக்கற்பித்தல்
5.ஒப்படைமுறைக் கற்பித்தல்
6.கண்டறிமுறைக் கற்பித்தல்
7.படிமுறைக்கற்பித்தல்
8.சிந்தனைக்கிளறல் கற்பித்தல் முறை
9.விளையாட்டு முறைக்கற்பித்தல்
10.பாத்திரமேற்று நடித்தல்
11.நுண்முறைக்கற்பித்தல்
12.போலச்செய்தல் கற்பித்தல் முறை
13.வெளிக்களச் செயற்பாட்டு கற்பித்தல் முறை
14.முன்வைத்தல் முறை
15.வணிக முறை கற்பித்தல்
16.பிரச்சினை திர்த்தல் முறை
17.செய்திட்ட கற்பித்தல் முறை
என பல வகை கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான இடத்தில் வகுப்பறை கற்பித்தலில் சரியான முறையை தெரிவு செய்யும் போது கற்றல், கற்பித்தல் சிறப்பாக அமையும்.
0 கருத்துகள்