Teaching method|கற்றல் கற்பித்தலுக்கான அணுகுமுறைகள் |Learning Teaching Materials

கற்றல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள்

சிந்தனை கிளறல் 

சிந்தனைக் கிளறல் ஒரு பிரசித்திபெற்ற கற்பித்தல் நுட்பமாகும். இந்த நுட்பம் குழு ரீதியாக கருத்துகளை பிறப்பிப்பதற்கும் பகிர்வதற்கும் இடமளிக்கிறது. இது ஆக்கச் சிந்தனையை, பிரச்சினை தீர்த்தல் மற்றும் கூட்டாக வேலைசெய்தல் என்பவற்றை ஊக்குவிப்பதற்கு விளைதிறனுள்ள முறையாகும் 

சிந்தனைக் கிளறல் பொதுவாக பின்வரும் படிமுறைகளைக் கொண்டுள்ளது. அவையாவன: 

பிரச்சினையை அல்லது தலைப்பை வரையறை செய்தல் : சித்தனைத் கிளறலுக்கான பிரச்சினையை அல்லது தலைப்பை போதனாசிரியர் வரையறை செய்வார். பிரச்சினை அல்லது தலைப்பு கற்றல் குறிக்கோள்களுக்கு பொருத்தமானதாக, தெளிவாக, குறிப்பானதாக இருத்தல் வேண்டும். 

கருத்தகளைப் பிறப்பித்தல் : பிரச்சினைக்கு அல்லது தலைப்புக்குப் பொருத்தமான பல கருத்துகளைப் பிறப்பிப்பதற்கு பங்குபற்றுபவர்கள் ஆக்கபூர்வமாக மற்றும் பிரச்சினைக்கு அப்பாலும் சிந்திக்க ஊக்குவிக்க வேண்டும். 

கருத்துகளைப் பதிவுசெய்தல் : சகல கருத்துகளும் வெண்பலகையில் அல்லது சுழல் அட்டையில் பதிவுசெய்யபப்படுகிறது ஆகவே ஒவ்வொருவரும் அவற்றைப் பார்க்கலாம் மற்றும் அவற்றைக் கட்டியெழுப்பலாம் இது குழுவின் கருத்துகளைக் காட்சி ரீதியாக முன்வைப்பதுடன் கலந்துரையாடலுக்கு வசதிப்படுத்துகிறது. 

கலந்துரையாடுதலும் கருத்துகளை மதிப்பிடுதலும் : சாதகத் தன்மை, பொருத்தப்பாடு, மற்றும் உள்ளார்ந்த தாக்கம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு கலந்துரையாடப்படும்இ கருத்துகளைத் தூய்மைப்படுத்துவதும் அவற்றை சிறந்தவையாக விருத்தி செய்தலும் இதன் இலக்காகும். 

சிறந்த கருத்தைத் தெரிவுசெய்தல்: மதிப்பீட்டு நியதிகளின் அடிப்படையில் குழுவானது சிறந்த கருத்தினைத் தெரிவுசெய்யும். மற்றும் சிறப்;பான நடவடிக்கைக்காக தீர்மானங்களை எடுக்கும் 

தொகுத்து நோக்கும் போத, சிந்தனைக் கிளறலானது ஒரு விளைதிறனுள்ள கற்பித்தல் நுட்பமாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் இது கற்பவர்கள் ஆக்கபூர்வமாக, விமர்சனரீதியாக சிந்திக்கத் ஊக்குவதுடன் பலவித நோக்குகளையும் கவனத்தில் கொள்கிறது. இது ஒத்துழைப்பையும் இணைத்து பணியாற்றும் இயல்பையும் வளர்க்கிறது. 

ஏனெனில் கற்பவர்கள் ஒன்றுறிணைந்து கருத்துகளைப் பிறப்பிக்கிறார்கள் மற்றும் தூய்மைப்படுத்துகிறார்கள் மேலும், சிந்தனைக் கிளறலை வெவ்வேறு கற்றற் சூழலிலும் மேற்கொள்ளலாம் மற்றும் பரந்தளவிலான பாடங்களையும் தலைப்புகளையும் கற்பிக்க இந்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.


வினாக் கேட்டல்

வினாக்கேட்டல் ஒரு பொதுவான கற்பித்தல் நுட்பமாகும் சிந்தனையைத் தூண்டுவதற்கும், கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும் மற்றும் விளங்குவதைப் கணிப்பிடுவதற்கும்; கற்பவர்கள் வினாக் கேட்பதுடன் இந்த நுட்பம் தொடர்புடையது. வினாக்கள் பலவகையாக உள்ளன. அவற்றைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் திறந்த வினாக்கள், மூடிய வினாக்கள் மற்றும் ஆய்வு வினாக்கள் என இவை வகைப்படுத்தப்படுகின்றன. 

திறந்த வினாக்கள் மூலம் கற்பவர்கள் விரிவானதும் சிந்திக்க கூடியவையானதுமான விடைகளை வழங்க வேண்டும் இத்தகைய வினாக்கள் கற்பவர்களை விமர்சன ரீதியாகச் சிந்திக்க, தகவலைப் பகுப்பாய்வு செய்ய, மற்றும் அவர்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்த தூண்டுதலளிக்கின்றன. உதாரணமாக, திறந்த வினாக்கள் அதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்? அதனை எவ்வாறு தீர்ப்பீர்? என்றவகையில் அமையும். 

மூடிய வினாக்கள் கற்பவர்களிடமிருந்து சுருக்கமான மற்றும் குறிப்பான விடைகளை வழங்க வேண்டும் எனவும்தஅத்தகைய வினாக்கள் கிரகித்தல். துகவல்களை ஞாபகப்படுத்தல் மற்றும் அறிவைச் சோதித்தல் என்பவற்றைச் சரிபார்ப்பதற்குப் பயனுடையவை. உதாரணமாக, நாட்டின் தலைநகரம் எது? எழுதியது யார்? எப்போது நடைபெற்றது? என்ற வகையான வினாக்களை உள்ளடக்கும் 

ஆய்வு வினாக்கள், கற்பவர்களின் துலங்கலை அவர்களுடைய சிந்தனையைக் கண்டறிவதற்கும் விரிவுபடுத்துவதகெனத் தொடர்வன. அத்தகையவினாக்கள் மிகவும் விரிவான . சிந்தனை மற்றும் வித்தியாசமான நோக்குகளை கவனத்திற் கொள்ள கற்றவரை ஊக்குவிக்கிறது. ஆய்வு வினாவுக்கு உதாரணமாக,  அதனை இன்னும் விரிவாக விளக்கமுடியுமா?’ அதனால் கருதப்படுவது யாது இது எவ்வாறு தொடர்புபடுகிறது?’ என்றவாறு அமையும் 

தொகுத்துக் நோக்கும் போது, வினாக்கேட்டல் வினைத்திறனுள்ள கற்பி;த்தல் நுட்பமாகும் ஏனெனில், இது செயலூக்கமுள்ள கற்றல் ஈடுபாடு, விமர்சனச் சிந்தனை, பிரச்சினை தீர்த்தல் திறன்கள், ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, மற்றும் உடனடியான பின்னூட்டல் மற்றும் கணிப்பீடுகளுக்கு உதவுகிறது. 

மேலும் கற்பித்தலை வேறுபடுத்தவும் வெவ்வேறு கற்றல் பாங்குகளை பின்பற்றவும் வினாக்கேட்டலைப் பயன்படுத்தலாம் இருந்தாலும், போதனாசிரியர்கள் பொருத்தமாகவும் வினைத்திறனுள்ள விதத்திலும் இதனைப் பயன்படுத்துவதுடன் கற்பவர்கள் பங்குபற்றுவதில் ஊக்கக்கமளிப்பதைத் தவிர்க்க வேண்டும் 


பாத்திரமேற்றல் 

பாத்திரமேற்றல் என்பது ஒரு கற்பித்தல் நுட்பமாகும் இதில் பாத்திரம் ஏற்பவர்கள் ஒரு காட்சியில் அல்லது சந்தர்ப்பத்தில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிப்பதுடன் தொடர்புடையது. பாத்திரம் ஏற்றல் பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் கற்பவர்கள், தொடர்பாடலை விருத்திசெய்ய, பிரச்சிகைளைத் தீர்க்க மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் திறன்களை விருத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது 

பாத்திரமேற்றல் பொதுவாகப் பின்வரும் படிமுறைகளுடன் தொடர்புடையது: 

காட்சியை வரையறுத்தல் : கற்பவர்கள் நடிப்பதற்கான காட்சியை அல்லது சந்தர்ப்பத்தைப் போதனாசிரியர் வடிவமைப்பார். அந்தக் காட்சியானது, கற்றல் இலக்குகளுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். மற்றும் தெளிவாவும் குறிப்பாகவும் இருக்க வேண்டும் 

பாத்திர ஒப்படைப்பு : கற்பவர்களின் வெவ்வேறு பாத்திரங்களை பாத்திர விவரம் மற்றும் சூழமைவு என்பவற்றைப் போதனாசிரியர் வழங்குவார் மாணவர்கள் தமது பாத்திரத்திற்கான ,ஊக்கல், இலக்கு மற்றும் கண்ணோட்டங்களை விளங்கிக்கொள்ள உதவும் 


காட்சியில் நடித்தல் : கற்பவர் காட்சியில் தமது பாத்திரத்தை நடிப்பதுடன் பாத்திரத்திற்கு ஏற்றவகையில் ஏனையவருடன் ஊடாடுகிறார். யதார்த்தமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதே இதன் இலக்காகும் அத்துடன் பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வுகளைத் தேடுவதாகவும் இருக்கும். 

பிரதிபலிப்பும் மீளக்கூறுதலும் : பாத்திமேற்று நடித்த பின்னர் இந்தக் குழு தனது அனுபவங்களைப் பிரதிபலிப்பதுடன் தாம் கற்றவறைப் பற்றிக் கலந்துரையாடுலும் ;. பாத்திமேற்று நடிக்கும்போது உமது உணர்வுகள் எவ்வாறு இருந்தன?:: இந்த அனுபவத்திலிருந்து கற்றது என்ன? ‘அடுத்த தடவை வித்தியாசமாக என்ன செய்வீர்?’ என ஆசிரியர் வினாக்களைக் கேட்டு பிரதிபலிப்பை நடத்துவார் 

தொகுத்து நோக்கும்போது, பாத்திமேற்றல் ஒரு வினைத்திறனுள்ள கற்பித்தல் நுட்பமாகும் ஏனெனில் இது கற்பவர்களுக்கு உடனடி அனுபவங்களை வழங்குகிறது, யதார்த்தமான மற்றும் அர்த்தமுற்ற சூழமைவில் முக்கியமான திறன்களை விருத்திசெய்ய உதவுகிறது. ஓத்துழைப்பு மற்றும் குழுவேலையையும் ஊக்குவிக்கிறது. அத்துடன், பிரச்சினையை தீர்க்கவும் இலக்கினை அடையவும் உதவுகிறது. மேலும், பாத்திரமேற்றலானது வித்தியானமான கற்றல் சூழலை பின்பற்றுவதற்கும் அதிகமான பாடங்களையும் விடயங்களையும் கற்பிக்க உதவுகிறது. 


போலச் செய்தல் 

போலச் செய்தல் ஒரு கற்பித்தல் நுட்பமாகும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னணியில் உண்மையுலகக் காட்சிகளை அல்லது சூழலை மீளுருவாக்கம் செய்வதுடன் தொடர்புடையது. இதில் கற்பவர்கள் பாதுகாப்பான மற்றும் யதார்த்தமான முறையில் அறிவையும் திறன்களையும் விருத்திசெய்ய இடமளிக்கிறது. 4 

போலச் செய்தல் செயல்முறையின் பொதுவான படிமுறைகள் பின்வருமாறு: 

காட்சியை வரையறுத்தல் : கற்பவர்கள் பாவனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை போதனாசிரியர் வடிவமைப்பார். அந்தக் காட்சியானது, கற்றல் இலக்குக;க்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். முற்றும் தெளிவாவும் குறிப்பாகவும் இருக்க வேண்டும் 

பாவனையை அமைத்தல்: பாவனைக்கான சூழலை போதனாசிரியர் உருவாக்குவார். மற்றும் கற்பவர்களுக்குத் தேவையாக சாதனங்களையும் பொருட்களையும் வழங்குவார். பாவனைக்கான சூழல் யதார்த்தமாக அமைவதோடு ஈடுபடக்கூடிய கற்றல் அனுபவங்களையும் வழங்க வேண்டும். 

பாவனையை நிகழ்த்துதல்: கற்பவர் பாவனையை நிகழ்த்துவார். அவர் தமது அறிவையும் திறன்களையும் பிரயோகித்து சூழலுடனும் மற்றும் ஏதாவது பாவனைசெய்யப்படும் பாத்திரங்களுடன் அல்லது பொருட்களுடன் ஊடாட்டம் செய்து பாவனைசெய்தலைப் பிரயோகிப்பார். யதார்த்தமான மற்றும் அர்த்தமுள்ள ஊடாட்டங்க;ம் பிரச்சினைக்கு அல்லது சந்தர்ப்பத்துக்கு வித்தியாசமான தீர்வுகளைக் காண்பதும் இதன் இலக்காகும் . 

பிரதிபலிப்பும் மீளக்கூறுதலும் : பாவனை செய்த பின்னர், குழுவானது தனது அனுபவங்கள் மீது பிரதிபலிப்புச் செய்வதுடன் கற்ற விடயங்களைக் கலந்துரையாடுவர். புpரதிபலிப்புச் செய்வதற்கேற்றவாறு போதனாசிரியர் வினாக்களை வினவுவார் பாவனையில் நன்றாக இடம்பெற்றது என்ன? ‘நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை?’ நீங்கள் கற்றவற்றை உண்மையுலக நிலைமையில் எவ்வாறு பிரயோகிப்பீர்? போன்ற வினாக்களை வினவலாம் 

சுருக்கமாகக் நோக்கும் போது போலச்செய்தல் ஒரு வினைத்திறனுள்ள கற்பித்தல் நுட்பமாகும் ஏனெனில் இது கற்பவர்களுக்கு உடனடி அனுபவங்களை வழங்குகிறது, யதார்த்தமான மற்றும் அர்த்தமுற்ற சூழமைவில் முக்கியமான திறன்களை விருத்திசெய்ய உதவுகிறது. பிரச்சினையை தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது. 

கற்பவர்கள் வித்தியாசமான தீர்வுகளையும் விளைவுகளையும் கண்டறிவதற்கு ஊக்குவிக்கிறது. மேலும், போலச் செய்தல் பல்வேறு கற்றல் சூழமைவுகளில் பின்பற்றப்படக்கூடியது. பல பாடங்களையும் விடயங்களையும் கற்பிக்கப் பயன்படுத்தலாம். ; இலக்கினை அடையவும் உதவுகிறது. மேலும், பாத்திரமேற்றலானது வித்தியானமான கற்றல் சூழலை பின்பற்றுவதற்கும் சுகாதாரப் பாதுகாப்பு தொடக்கம் பொறியியல் வரையிலான பாடங்களையும் விடயங்களையும் கற்பிக்க உதவுகிறது. 


செய்துகாட்டல் 

செய்துகாட்டல். என்பது ஒரு கற்பித்தல் நுட்பமாகும் இதில் கற்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பணியை அல்லது திறனை தனியாளாக அல்லது வீடியோ அல்லது கேட்டல் பதிவுகள் ஊடாக வினையாற்றுகிறார் எனக் காட்டுவதுடன் தொடர்புடையது. செய்துகாட்டலின் இலக்கு கறிப்பிடட திறன் பற்றிய தெளிவான மற்றும் காட்சிசார் விளக்கத்தை வழங்குவதாகும் அத்துடன் செய்துகாட்டல் முடிந்த பின்னர், அவற்றை அவதானித்து வினாக் கேட்கவும் இடமளிக்கிறது. 

செய்துகாட்டல் செயல்முறை பொதுவாகப் பின்வரும் படிமுறைகளுடன் தொடர்புடையது: 

செய்துகாட்டலுக்கான ஆயத்தம் : செய்துகாட்டலுக்குத் தேவையான பொருட்களையும் சாதனங்களையும் மற்றும் செய்துகாட்டலுக்கான சூழலையும் போதனாசிரியர் ஆயத்தம் செய்வார். அத்துடன் செய்துகாட்டலுக்கான படிமுறைகளையும் அதில் எடுத்துக்காட்ட வேண்டிய முக்கிய குறிப்புகளையும் அவர் திட்டமிடுவார். 

செய்துகாட்டலை ஆற்றுதல்: செய்துகாட்டலில் ஆற்ற வேண்டியவற்றின் ஒவ்வொரு படிமுறை பற்றிய தெளிவானதும் சுருக்கமானதுமான விளக்கத்துடன் போதனாசிரியர் செய்துகாட்டுவார். இதனை மாணவர்கள் அவதானிப்பதற்கும் கிரகிப்பதற்கும் இடமளிக்கும் வகையில் குறைந்த வேகத்துடனும் நோக்கத்துடன் கூடிய விதத்திலும் செய்தல் வேண்டும். 

வினாக்களுக்கு இடமளித்தல் : செய்துகாட்டலின் பின்னர், வினாக் கேடடபதற்கும் தெளிவுபெறுவதற்கும் போதனாசிரியர் இடங்கொடுத்தல் வேண்டும். குறித்த படிமுறைகள் சாதனங்கள் அல்லது தொழில்நுட்ப மாறுபாடு;கள் பற்றி மாணவர்களுக்கு வினாக்கள் இருக்கலாம் 

பின்னூட்டல் வழங்குதல் : மாணவர் பணிகள் அல்லது திறன்;களின் வினையாற்றல் மீது போதனாசிரியர் பின்னூட்டல் வழங்குதல் வேண்டும். பின்னூட்டலானது, மாணவர்களின் வெற்றிகரமான நிறைவேற்றுகை, மேம்படுத்தல் அல்லது தவறுகளைத் திருத்துதல் என்பவற்றுக்கான ஆலோசனைகள் என்பவற்றை உள்ளடக்கும். 

தொகுத்து நோக்கும்போது, செய்துகாட்டல் ஒரு வினைத்திறனுள்ள கற்பித்தல் நுட்பமாகும் ஏனெனில் இது பணி அல்லது திறனகளில்; கற்பவர்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்குவதுடன் செய்துகாட்டலை அவதானிப்பதற்கும் அதன் பின்னர் வினாக்கள் கேட்பதற்கும் இடமளிக்கிறது. 

உடனடியாகப் பின்னூட்டலை வழங்கி தவறுகளைத் திருத்துவதற்கும் இடமளிக்கிறது. இதனால் கற்பவர்கள் தமது வினையாற்றலை மேம்படுத்தலாம். மேலும், செய்துகாட்டல் வெவ்வேறு கற்றல் சூழமைவுகளில் பயன்படுத்தக கூடியது. மற்றும் பலவகையான பாடங்களையும் திறன்களையும் கற்பிக்கப் பயன்படுத்தலாம்.


பொருட்காட்சி நுட்பம்  

பொருட்காட்சி ஒரு கற்பித்தல் நுட்பமாகும் இதன்மூலம் கற்பவர்களுக்கு பொருட்கள் அல்லது கலைப்பொருட்களின் திரட்டுகளை அவர்கள் குறிப்பிட்ட பாடம் அல்லது தலைப்பினை விளங்கிக்கொள்வதற்கும் ஆராய்வதற்கும் பயன்படுத்தலாம். பொருட்காட்சி பல வடிவங்களில் உள்ளது. அருங்காட்சியகத்திலே இடம்பெறும் பௌதீகக் காட்சிப்படுத்தல் அல்லது நிகழ்நிலை திரட்டுகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். 

பொருட்காட்சிச் செயன்முறை பொதுவாகப் பல படிமுறைகளுடனானது. அவையாவன: 

1.பொருட்பாட்சிக்கான விடயத்தை வரையறை செய்தல்: பொருட்காட்சிக்கான விடயத்தை போதனாசிரியர் வரையறை செய்வார். அந்த விடயத்திற்கான பொருட்களை அல்லது கலைப்பொருட்களை அவர் திரட்டுவார் தெரிவுசெய்யப்படும் விடயமானது கற்றல் குறிக்கோள்களுக்குப் பொருத்தமாக, தெளிவாக, குறிப்பானதாக இருத்தல் வேண்டும். 

2. பொருட்காட்சியை அமைத்தல்: பொருட்காட்சிக்கான இடத்தை தெரிவு செய்தல், பொருட்களை அல்லது கலைப் பொருட்களை கவர்ச்;சிகரமாக ஒழுங்குபடுத்துதல், என்பவறறைப் போதனாசிரியர் அமைத்துக்கொள்வார். பொருட்காட்சியானது, ஆராய்வு மற்றும் இடைத்தாக்கம் என்பவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் ஒவ்வொரு பொருளும் தெளிவாகப் பெயரிடப்பட்டு அல்லது விபரங்களுடன் இருத்தல் வேண்டும். 

3. ஆராய்வதற்கு நேரம் வழங்குதல்: கற்பவர்கள் தனியாக அல்லது குழுக்களாக பொருட்காட்சியைப் பார்ப்பதற்கு நேரம் கொடுக்கப்பட வேண்டும். பிரதிபலிப்பையும் கலந்துரையாடலையும் ஊக்குவிக்கும் பொருட்டு போதனாசிரியர் விளக்கமளிக்கலாம் அல்லது வினாக் கேட்கலாம். 

சுருக்க விளக்கமும் கலந்துரையாடலும் : பொருட்காட்சியின் பின்னர், குழுவானது, அனுபவங்களை பிரதிபலிக்கலாம்,தாம் கற்றவற்றைக் கலந்துரையாடலாம் இவ்விடயத்தில் ‘பொருட்காட்சியிலிருந்து நீங்கள் கற்றவை எவை?’ பல்வேறு பொருட்களிடையே நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் என்ன? நீங்கள் கற்றவற்றை உண்மையுலகில் எவ்வாறு பிரயோகிக்கலாம்? என்ற அடிப்படையில் பிரதிபலிக்கலாம் 

தொகுத்து நோக்கும் போது, பொருட்காட்சி ஒரு விளைதிறனுள்ள கற்பித்தல் நுட்பமாகும். இது உடனடியான கற்றல் அனுபவங்களை வழங்குகிறது. மற்றும் குறிப்பிட்ட பாடம் அல்லது தலைப்பு தொடர்பான பொருட்களுடனும் கலைப்பொருட்களுடனும் இடைத்தாக்கம் கொள்வதற்கும் அவை பற்றி ஆராய்வதற்கும் வாய்ப்பளிக்கிறது. 

கற்பவர்கள் வெவ்வேறு பொருட்களிடையே இணைப்புகளை உருவாக்க ஊக்குவிப்பதுடன் .அவைபற்றிய வித்தியாசமான கண்ணோட்டங்களை ஆராய்வதற்கும் இடமளிப்பதால் விமர்சனச்சிந்தனை, பிரச்சினைதீர்த்தல் போன்ற திறன்கள் விருத்தியடைகின்றன. மேலும், பொருட்காட்சியை பல்வேறுபட்ட கற்றல் சூழமைவுகளிலும் வரலாறு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் பரந்தளவிலான பாடங்கள் மற்றும் தலைப்புகளை கற்பிக்கப் பயன்படுத்தலாம் 7 


கருத்துரையிடுக

0 கருத்துகள்