உன் மனநிலையை வைரம்போல் உயர்த்து உன் நிலையும் தகுதியும் உயரும்

ஒரு ஊரிலே ஒரு ஞானி இருந்தார். ஒரு சீடன் அவரிடம் அடிக்கடி அதைச் சொல்லிக் கொடுங்கள். இதைச் சொல்லிக் கொடுங்கள் என்று தொந்தரவு பண்ணிக் கொண்டே இருப்பான்.ஒரு நாள் அவனை அழைத்து ஒரு கல்லைக் கையில் கொடுத்தார் . இதை காய்கறி சந்தைக்கு கொண்டு போய் விற்றுவிட்டு வா என்று சொன்னார்.

அந்த கல் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பெரிதாக இருந்தது. குரு சொன்னார் அந்த கல்லை உண்மையில் விற்றுவிடாதே விற்பது மாதிரி நடி பல நபர்களை பார்ப்பாய் எல்லோரையும் நன்றாக அவதானித்து விட்டு வா என்றார்.

கல்லை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போனான். பல பேர் அதைப் பார்த்தார்கள். இந்த கல்லை காய்கறி விற்பனை செய்வதற்கு எடைக்கு பதிலாக பயன்படுத்தலாம் பிள்ளைக்கு வாங்கி கொடுத்து விளையாடச் சொல்லலாம் என்று நினைத்து அந்த கல்லை குறைந்த விலைக்கு கேட்டார்கள்.



சீடன் திரும்பி வந்து விஷயத்தைச் சொன்னான். குரு மறுபடியும் சொன்னார் நீ தங்கம் விக்கிற இடத்துக்குப் போய் முயற்சி செய்து பார் சீடன் திரும்பி வந்து அங்கே ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம் அங்கே இருக்கிற மக்கள் ரொம்ப பெருந்தன்மையானவர்கள் என்று சொன்னான்.

நீ இப்போது வைரம் விற்கிற கடைத்தெருவுக்குப் போய் வந்து நடப்பதைச் சொல் என்றார். அங்கே 50,000 ரூபாய்க்கு கேட்டார்கள் கொடுக்க முடியாது என்றேன். ஒரு லட்சம் வரைக்கும் கூட வாங்குவதற்கு ஆசைப்பட்டார்கள். நான் சம்மதிக்கவில்லை இன்னும் விலை அதிகரித்து கொண்டே போனார்கள் பைத்தியக்கார ஜனங்கள் என்று சொன்னான்.

இப்போது குரு சீடனிடம் சொன்னார் நீ விற்கவில்லை என்றாலும் அதன் விலை எப்படி அதிகமாகி விட்டது பார்த்தாயா? இந்தக் கல்லைப் போல்தான் மனிதனும் நாம் காய்கறிச் சந்தையில் இருக்கின்ற போது நம் மதிப்பு குறைவு எப்போது நாம் நமது மனநிலையை வைரம்போல் உயர்த்துகிறோமோ அப்போதுதான் நம் நிலையும் தகுதியும் உயரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்