ஆசிரியர்களின் பதவி உயர்வும் தடைதாண்டலும்


போதனாவியல் ஆசிரிய பயிற்சி பெற்றவர்கள் 3-I(ஆ)

2014 ஆம் ஆண்டு 2-II இற்கு பதவியுயர்வு பெற்ற போதனாவியல் ஆசிரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 2-ii காலப்பகுதில் 07 வருடங்களுக்குள் பட்டம்/கல்விமாணிப் பட்ட தகைமையைப் பூர்த்தி செய்தால் 07 வருட முடிவில் 2-1 தரத்திற்கு பதவியுயர்வு கிடைக்கும். இதன் அடிப்படையில் இவ் ஆசிரியர்கள் 2021 ஆண்டு பதவியுயர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.

இவர்கள் 2 ஆவது வினை திறன் தடைதாண்டலை பூர்த்திசெய்ய வேண்டும். 2 ஆவது வினை திறன் தடைதாண்டலின் போது பூர்த்திசெய்ய வேண்டிய 08-14 மொடியூல் (இதவடிவம்) பின்வருமாறு

மொடியூல் 08: கல்வியுடன் தொடர்பு பட்ட கட்டளைச் சட்டங்கள் மற்றும் கல்வி வரலாறு. மொடியூல்

 09: ஆங்கிலப் பயன்பாடுகள்.

மொடியூல் 10: பாட இணை செயற்பாடுகள் மற்றும் பாடசாலைச்                                              செயற்றிட்டம். 

மொடியூல்11: 

அலுவலக முறை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு சாதன இணைப்புக்களை நடத்தி பின்பற்ற வேண்டிய செயற்பாட்டு முறைகள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களை எடுத்தல்.

மொடியூல் 12: சிறுவர் சுகாதார மற்றும் போசாக்கு.

மொடியூல் 13: விளையாட்டு மற்றும் உடற்கல்வி அறிவு.

மொடியூல் 14 : மனோவியல் ஆலோசனை.


ஆசிரியர்களின் பதவியுயர்வு பட்டதாரி ஆசிரியர்கள் 3-I(அ)

2014 ஆம் ஆண்டு 2-II இற்கு பதவியுயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 2-II காலப்பகுதில் 07 வருடங்களுக்குள் பட்டப் பின் படிப்பு கல்வி டிப்ளோமா தகைமையைப் பூர்த்தி செய்தால் 07 வருட முடிவில் 2 -1 தரத்திற்கு பதவியுயர்வு கிடைக் கும். இதன் அடிப்படையில் இவ் ஆசிரியர்கள் 2021 ஆண்டு பதவியுயர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.

இவர்கள் 2 ஆவது வினை திறன் தடைதாண்டலை பூர்த்திசெய்ய வேண்டும்.2 ஆவது வினை திறன் தடைதாண்டலின் போது பூர்த்திசெய்ய வேண்டிய 08-14 மொடியூல் (இதவடிவம்) பின்வருமாறு

மொடியூல் 08: கல்வியுடன் தொடர்பு பட்ட கட்டளைச் சட்டங்கள் மற்றும் கல்வி வரலாறு. 

மொடியூல் 09 : ஆங்கிலப் பயன்பாடுகள்.

மொடியூல் 10: பாட இணை செயற்பாடுகள் மற்றும் பாடசாலைச் செயற்றிட்டம். 

மொடியூல் 11: அலுவலக முறை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு சாதன இணைப்புக்களை நடத்தி பின்பற்ற வேண்டிய செயற்பாட்டு முறைகள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களை எடுத்தல்.

மொடியூல் 12 : சிறுவர் சுகாதார மற்றும் போசாக்கு.

மொடியூல் 13 : விளையாட்டு மற்றும் உடற்கல்வி அறிவு.

மொடியூல் 14 : மனோவியல் ஆலோசனை.


2015 ஆம் ஆண்டு 2-1 இற்கு பதவியுயர்வு பெற்ற ஆசிரியர்கள்

2015 ஆம் ஆண்டு 2-1 இற்கு பதவியுயர்வு பெற்ற ஆசிரியர்கள் சேவைக் காலத்தின் அடிப்படையில் 06 வருடங்களில் 01ஆம் வகுப்பு பதவியுயர்வு கிடைக்கும். இதன் அடிப்படையில் இவ் ஆசிரியர்கள் 2021 ஆண்டு பதவியுயர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.

2021.10.22 ஆம் திகதி வரை 01ஆம் வகுப்பு பதவியுயர்வுவைப் பெற்ற, அல்லது பதவியுயர்வுவைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் 03 ஆவது வினை திறன் தடைதாண்டலை பூர்த்திசெய்ய தேவையில்லை
2021.10.22 ஆம் திகதியின் பின் 01 ஆம் வகுப்பு பதவியுயர்வுவை பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள் 03 ஆவது வினை திறன் தடைதாண்டலை பூர்த்தி செய்ய வேண்டும்.

3 ஆவது வினை திறன் தடைதாண்டலின் போது பூர்த்திசெய்ய வேண்டிய 15-20 மொடியூல் (இதவடிவம்) பின்வருமாறு

மொடியூல் 15: கல்வித் துறையில் காணப்படும் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு மற்றும் அதற்கான தொடர்புகளைப் பேணல், உயர்கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில் சார் கல்வி.

மொடியூல் 16: ஆராய்ச்சி மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி முறைகள்.

மொடியூல்17: நபர்களுக்கிடையிலான இணைப்புக்கள் மற்றும்சிந்தனைத்திறன் அபிவிருத்தி.

மொடியூல் 18: மானிட வள முகாமைத்துவம்.

மொடியூல் 19: முறைசாராக் கல்வி மற்றும் மென்பொருள் திறமை.

மொடியூல் 20: நேர முகாமைத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல்                                           ஆலோசனை


கருத்துரையிடுக

0 கருத்துகள்