இலங்கையின் கல்வி வரலாறு 2300 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியைக் கொண்டதாகும்.
மன்னன் தேவநம்பிய தீசன் காலத்தில் இந்திய பேரரசராகவிருந்த அசோகனால் அனுப்பப்பட்ட பௌத்த துறவிகளினால் நிறுவப்பட்ட பௌத்தத்தின் வருகையோடு வட இந்தயாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சமஸ்கிருத மொழியின் அடிப்படையில் பண்டைய கல்வி உருவானதாக நம்பப்படுகின்றது. இதனடிப்படையில் பௌத்த வழிபாட்டிடங்கள் மற்றும் பிரிவேனாக்கள் (துறவிகளுக்கான மடங்கள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானதே இக்கல்வி முறைமை எனலாம்.
துறவிகளுக்கான மடங்கள் மதகுருமார்களுக்கானதாகவும உயர் கல்விக்கானதாகவுமிருந்தன. இதற்கான ஆதாரங்ளை மஹாவம்சம் மற்றும் சூளவம்சம் ஆகிய நூல்களில் காணலாம். 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் இலங்கை தீவுக்கு வருகைத் தந்த இளவரசன் விஜயன் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் இக்கால வரலாறு எழுதப்பட்டுள்ளது.
6.1. ஆரம்பகால இலங்கைக் கல்வியின் வளர்ச்சிப் பரிணாமம்
காலனித்தவ ஆட்சி காலம் வரையிலான இலங்கையின் கல்வி முறைமையானது அடிப்படையில் உயர் நிலையிலிருந்த சிறு குழுவினருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதோடு ஒப்பீட்டளவில் குறைவான தொழிநுட்பத்தைக் கொண்டிருந்தது. சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் கல்வி கற்காதவர்களாக அல்லது ஓரளவிலான கல்வியைக் கற்றவர்களாகவே இருந்தனர். சிங்கள இன மக்களிடையே காணப்பட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பௌத்த துறவிகளால் முன்னெடுக்கப்பட்டது. கிராம மட்டத்தில் கற்ற துறவிகள் சலுகையுள்ள மாணவர்களுக்கு பன்சல அல்லது கோவில்களில் கற்பித்தனர், இளம் வயது பிள்ளைகளுக்கான கலைத்திட்டமானது சிங்கள அரிச்சுவடி மற்றும் ஆரம்பநிலை சிங்கள16ம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் புராதன கல்வி முறைமை
இலக்கியங்களை மனனஞ் செய்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ‘நம்பொத்த' - புத்தரின் சன்னதிகள், ‘மகுல் லக்குண’ புத்தரின் உடலில் காணப்படும் சுப குறிகாட்டிகள் மற்றும் புத்தரின் வாழ்க்கைத் தொடர்பான சிறப்பான கதைகள் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டிருந்தன. உயர் கல்வியின் நோக்கமானது பல்கலைக்கழகம் (பிரிவேனா) வில் கற்கும் பௌத்த துறவியாகுவதற்குரிய வகையில் ஒதுக்கப்பட்டதாக காணப்பட்டது. சிறப்பாக அது பாளி மொழியிலான வேதத்தை மனனஞ் செய்தல் மற்றும் விளக்கம் கூறுவதாக அமைந்தது.
தமிழ் மக்கள் மத்தியில் கிராமிய பாடசாலைகள் கோவில்களுக்கு அண்மையில் அமைந்திருந்ததோடு கற்ற பிராமணர்களால் அல்லது வேளார்களால் நடத்தப்பட்டன. கலைகளைக் கற்ற மாணவரிடையே தொழிநுட்ப பயிற்சியானது பெரிதும் வளரச்சி பெற்றதாகவிருந்தது. குறிப்பாக கட்டிடக்கலை அல்லது சிற்பக்கலை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இயந்திரவியலைக் கற்றவர்கள் நீர்ப்பாசனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு கேத்திரக் கணிதவியலைப் பயன்படுத்தி தீர்வுகளைக் கண்டனர். மேலும் கைவினையைக் கற்றவர்கள் மற்றும் பல்வேறு தொழிநுட்ப நிபுணர்கள் வெவ்வேறு தொழில் முயற்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தினர். எவ்வாறாயினும் இத்தகையப் பயிற்சிகள் மூடிய சமூக அமைப்புகள், சாதி அல்லது குடும்ப அடிப்படையில் வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அறிவானது தந்தையிடமிருந்து தனயன்களுக்குக் கடத்தப்படும் ஒன்றாகவும் காணப்பட்டது.
ஆரம்ப கால இலங்கையில் பயிற்சி என்பது வழமைக்கு மாறான ஒன்றாக காணப்படவில்லை. இதே காலப்பகுதியில் ஏனைய நாடுகளில் நிலவிய நடைமுறைகளுக்கு ஒத்ததாவே காணப்பட்டது, புராதன பாரம்பரியங்கள் நிலவிய நாடுகளிலும் மத்திய கால ஐரோப்பாவிலும் கல்வியின் சகல செயற்பாடுகளும் கிறிஸ்த்தவ பாதிரிமார்களால் அடுத்த பரம்பரையினருக்கு கையளிக்கும் ஒன்றாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (முக்கர்ஜீ 1947) இதனடிப்படையில் கிராமிய கோவில்களே கல்வி வழங்கும் மத்திய நிலையங்களாக இருந்தமை நோக்கற்பாலது. மேலும் இந்நிறுவனங்கள் அக்காலப்பகுதிக்குப் பொருத்தமான சுல்வியை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
6.2. பண்டைய காலக் கல்வியின் கட்டமைப்பு
இலங்கையின் ஆரம்பக்கால பாரம்பரிய கல்வி முறைமையானது குறிப்பாக மூன்று மட்டங்களில்ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது
1.கிராமியப் பாடசாலை (குருகெதர) - இது ஆரம்ப கல்வி மட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியது.
2. கோயிற் பாடசாலை இது இரண்டாம் நிலை கல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது
3. பிரிவேனா இது உயர் கல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
பிள்ளைகள் கோயில்களில் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பாக எழுதவும் வாசிப்பதற்குமான வழிகாட்டல்களை கிராமிய பாடசாலைகளில் பெறக்கூடியதாக இருந்தது. பண்டைய காலக் கல்வி முறைமையின் முதற்படியாக கிராமிய பாடசாலைகள் செயற்பட்டடன. கிராமிய
உபாத்தியாயர் அவரது வீட்டில் இதனை முன்னெடுத்தார் (ஹேவாவசம் 1958).
கிராமிய பாடசாலைகள் (குரு கெதர -உபாத்தியார் வீடு)
குரு கெதர எழுதவும் வாசிப்பதுக்குமான செய்றபாடுகளுக்கு வரையறுக்கப்பட்டதாகக் காணப்பட்டது. 'வெலிபள்ள' அதாவது பரப்பி வைக்கபட்ட மணல்தட்டுகள் அல்லது மேடைகள் எழுதுவதற்குரிய பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன. பிரதான கற்பித்தல் முறையாக பொருட்களை கைகள் மூலமாக ஆக்குதல் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பெரும்பாலான பிள்ளைகள் தமது ஆரம்பக் கல்விக்காக இத்தகைய கிராமிய பாடசாலைகளுக்குச் சென்றனர். மேற்கத்தைய பாடசாலைகள் அறிமுகப்படுத்தப்படும் வரை இத்தகைய பாடசாலைகள் இயங்கின.
ஹேவாவசம் (1958) அவர்களது கருத்தின்படி பின்வரும் அடிப்படைகள் வாசிப்புக்கான சாதனங்களாக உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1. நம்பொத - நகரங்களின் பெயர்கள். ஆச்சிரமங்கள் நாட்டின் பௌதிகத் தோற்றப்பாடுகள் 2. மகுல் லக்குண - புத்தரின் உடலில் காணப்படும் நன்மைக்கான அடையாளங்களின் பட்டியல் 3. ஞான தெவிஹல்ல கணபதி தெய்வத்தினது வணக்கத்துக்குரிய அடையாளங்கள்
4. புத்தகாஜயா
5. சக்காஸ்காதய
ஆரம்பக்கல்வியானது இளம் சிறுவர்களுக்கானதாகக் காணப்பட்டது. பெரும்பாலான பிள்ளைகள் மேற்கல்வியை தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் தமது தந்தையின் வழிகாட்டலின் கீழ் பயிலுனர்களாக குறிப்பிட்ட காலப்பகுதி வரை பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர். இத்தகைய பயிற்சிகள் குடும்ப அங்கத்தவர்களால் கையளிக்கப்பட்ட
கைவினையுடன் தொடர்புடைய செயற்பாடுகளாகவிருந்தன.
கோயிற் பாடசாலைகள்
கோயிற் பாடசாலைகளுக்குச் சென்ற பிள்ளைகள் தமது தாய்மொழியில் எழுதவும் வாசிக்கவும் கூடியவர்களாக இருந்தனர். இதேவேளையில் இவர்களுக்கு பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகள் ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டன. கோவிற் பாடசாலைகளில் கல்வி இலவசமானதாகவும் மதகுருமார்களால் வழங்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.
இவ்வகையில் தனது இரண்டாம் நிலைக் கல்வியை கோயில் பாடசாலை அல்லது ஆச்சிரமங்களில் தொடர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பௌத்த துறவிகளாக அல்லது மருத்துவம் அல்லது சாஸ்த்திரக் கல்வியை விரும்புபவர்களாக இருந்தனர். கோவில் பாடசாலைகளின் கலைத்திட்டம் கல்விசார்ந்த விடயங்களையும் தொழில்சார் கற்கைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. கல்விசார் பாடங்களாக வரலாறு. இலக்கியம், அலங்காரம், சாஸ்த்திரம், மற்றும் எண் கணிதம் போன்றன காணப்பட்டன.
சமயம் சார்ந்த போதனைகள் அல்லது பௌத்தம் முக்கியமான பகுதியாகக் காணப்பட்டது. மேலும் தொழில்சார் பாடங்களாக சாஸ்திரம் மற்றும் மருத்தவம் ஆகியனவும் சிற்பக்கலை சித்திரம் வர்ணம் பூசுதல் போன்ற அழகியல் பாடங்களும், பாளி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிசார்ந்த பாடங்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆசிரியர்களாக பௌத்த துறவிகள் காணப்பட்டனர். இப்பாடசாலைகளுக்குத் தேவையான நிலம் மற்றும் பராமரிப்பு வசதிகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அரச உதவிகளில் தங்கியிருக்க வேண்டியருந்தது. பிரிவேனா
ஆரம்பத்தில் பிரிவேனாக்கள் அனுராதபுரத்தில் நிறுவப்பட்டதோடு அவ்வாறு இலங்கையில் நிறுவப்பட்ட பாரிய மையமாக மகா விகாரை அமைந்திருந்தது. அதேபோல அனுராதபுரத்தில் அமைக்கப்பட்ட ஏனைய நிலையங்களாக அபயகிரி மற்றும் ஜேதாவனராமய ஆகியன காணப்பட்டன.
பிரிவேனாக்கள் அமைதியும் சமாதானமும் நிலவிய காலப்பகுதியில் பெரிதும் விருத்தியுற்று சிறபபாக இயங்கின. தென்னிந்தியாவின் அரசியல்சார்ந்த படையெடுப்புகளின் பின்னர் இவை நலிவுற்றன. அரசின் உதவி கிடைக்காமையும். அமைதியின்மையும், பொது வாழ்க்கையின் இயல்பு நிலைமை பாதிக்கப்பட்டமையும் இதற்குக் காரணமாகின. இக்காலகட்டத்தில் பௌத்த
துறவிகள் அறிவுப் பொக்கிசங்களைப் பாதுகாப்பதற்காக தலைமறைவாகினர். மேலும் சிங்கள இராச்சியம் படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்தன. இதனால் பிரிவேனாக்களை தெற்கில் அமைக்க நேரிட்டது. 15ம் நூற்றாண்டின் இலக்கியமான சந்தேச பெரும் எண்ணிக்கையான பிரிவேனாக்கள் செயற்பட்டமை மற்றும் அறிவில் மேம்பட்ட பௌத்த துறவிகள் அவற்றில் கடமையாற்றியமை பற்றிய விடயங்களை சான்றுப்படுத்துகின்றன.
6.3. புராதன கால கல்வியின் பண்புகள்
சாதியமைப்பு முறைமை காரணமாக ஆரம்பகால இலங்கையின் கல்வியானது சமூக நகர்வுக்கான ஊடகமாக செயற்பட முடியவில்லை.
அரச பரம்பரையினர் மற்றும் வசதிப் படைத்தவர்களின் குடும்பத்தினர் மாத்திரம் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டனர். மேலும் பெரும்பாலான சாதாரண பொதுமக்களின் மொழி ஆற்றல்கள் குறைவாகவே காணப்பட்டன.
எவ்வாறாயினும் கிராமிய பாடசாலைகளின் செல்வாக்கு காரணமாக பொதுமக்களின் கல்வி மட்டம் திருப்தியடையக் கூடியதாக இருந்தது என்பதை சீகிரிய சுவர்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துகள் உறுதிப்படுத்துகின்றன.
பழங்காலத்துக் கல்வி செயற்பாடுகளானது முறைசாரா கல்வி முறைகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. சமய மற்றும் ஒழுக்கக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. பௌத்த துறவிகளின் போதனைகள், சடங்குகள். மற்றும் விழாக்கள் போன்றன பொது மக்களிடையே ஒழுக்கத்தை விருத்தி செய்வதற்கு உதவின.
ஆரம்பகால கல்வி முறைமையில் பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவானதாகவே காணப்பட்டன. எனினும் நடனம் மற்றும் சித்திரம் போன்ற தொழில்சார் கல்வியைப் அவர்கள் பெற்றுக் கொள்ள முடிந்தது,
வரலாற்று ஆதாரங்கள் நீர்ப்பாசனம், கட்டிடக்கலை, சிற்பக் கலை, மரவேலைப்பாடுகள், மிருக
வைத்தியம், சாஸ்திரம், மருத்துவம், படைகளுக்கான பயிற்சியளித்தல் போன்ற தொழில்நுட்ப துறைகள் வளர்ச்சியடைந்தருந்தமையை எடுத்துக் காட்டுகின்றன.
சிங்கள் இராசதானிகளிகளின் வீழ்ச்சியின் காரணமாக உதவிகள் கிடைக்கப் பெறுதல் தடைப்பட்டமையால் பண்டைய கல்வி முறைமையும் வீழ்ச்சியடைந்தது.
பாரம்பரிய மரபுசார்ந்த கல்வி முறைமை வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்கள்
மூலமாக
1. மேலைத்தேய ஆக்கிரமிப்புகளின் காரணமாக பாடசாலைகளின் வலைபின்னல் புதிய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமையும் அதுவரை நிலவிய பாரம்பரிய முறைமையினால் புதிதாக உருவாக்கப்பட்ட முறைமையோடு போட்டியிட முடியாமல் போனமையும் பிரதான காரணமாகும்.
2. மத மாற்றம் காரணமாக பௌத்தர்கள் கிறிஸ்த்தவ மதத்தினராக மாற்றப்பட்டமையால் பௌத்த
மக்களின் தொகை குறைவடைந்ததோடு சிங்கள மன்னர்களின் கொடையும் அக்காலப்பகுதியில்
குறைவடைந்தனால் கோயில்கள் மற்றும் பிரவேனாக்கள் சமூகத்தால் பாதுகாக்கப்பட வேண்டியனவாகின.
3. பாரிய சமூக மாற்றம் காரணமாக எழுந்த கேள்வி அல்லது தேவையை பாரம்பரிய கல்வி
முறைமையினால் நிறைவு செய்ய முடியாமல் போனமை மற்றுமொரு காரணமாகும்.
0 கருத்துகள்