பாடசாலை அதிபரின் கடமைப் பொறுப்புக்கள்
- ஒருபாடசாலை அதிபர் அப்பாடசாலையின் அனைத்து விடயங்களுக்கும் முழுமையாகப் பொறுப்பேற்பதுடன் பணிரீதியாக பின்வரும் விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும்.
- பாடசாலையின் நிருவாகத்திற்கும்,முகாமைத்துவத்திற்கும் தலைமை தாங்குதல்.
- மாணவர் அனுமதி தொடர்பாக தேசிய ரீதியான சுற்றுநிருபத்தைப் பின்பற்றுதல்.
- பாட,இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகள்
- பொருட்பதிவேட்டை முறையாகப் பேணுதல் வருடாந்தம் இற்றைப்படுத்தல்.
- பௌதிகவள அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படல்
- பாடசாலை நிதிசார் விடயங்களில் வெளிப்படைத்தன்மை பேணல் முறையான ஆவணப் பதிவுகளை மேற்கொள்ளல்.
- பணிப்பகிர்வுகளை வழங்கி தரங்களிப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
- பாடசாலை அபிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பனவற்றிற்கு தலைமையேற்றுச் செயற்படல்.
- பாடசாலைக்கும் சமூகத்திற்குமிடையே இணக்கப்பாடான நல்லுறவைப் பேணுதல்.
- தொடர்ச்சியான வகுப்பறை மேற்பார்வையை மேற்கொள்ளல்.
- ஆசிரியர் ஒழுக்கக்கோவை மாணவர் ஒழுக்கக்கோவை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்.
- மாணவர் தலைவர்கள் மூலம் தலைமைத்துவப் பண்பை வளர்த்தல், கண்காணித்தல்.
- உள்ளக மேற்பார்வையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல், பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளைப் பகுப்பாய்வுசெய்து நீண்டகால, குறுகியகால திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
- வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டத்தினூடாக பாடசாலைச் செயற்பாடுகளுக்கு சமூகப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல்.
- ஆசிரியர் வாண்மைவிருத்திச் செயற்பாடுகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல்.
- கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள், கடிதங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளல். ஆசிரியர் குழாமிற்கும் தெரியப்படுத்துதல்.
- இற்றைப்படுத்தப்பட்ட தகவல் முறைமையொன்றைப் பேணுதல்.
பிரதி அதிபர் (நிதி,நிருவாகம்) கடமைப் பொறுப்புகள்
- அதிபர் கடமையில் இல்லாதபோது அதிபருக்குரிய கடமைப் பொறுப்புக்களை ஏற்று செயற்படல்
- அதிபர் விடுமுறை பெற்றுக்கொள்ளும்போது பாடசாலையை முறையாகப் பொறுப்பேற்றல்
- முகாமைத்துவம்,நிருவாகப் பணிகளில் அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
- மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளல், செயலாற்றுகைப் படிவம் வழங்குதல் என்பவற்றுக்கு சுற்றுநிருபத்திற்கு ஏற்ப செயற்படல்.
- சேர்வு இடாப்பு,மாணவர் இடாப்பு என்பவற்றைப் பேணுதல்.
- அலுவலகக் கடிதத் தொடர்புகளுக்குப் பொறுப்பாயிருத்தல்.
- பாடசாலைப் பதிவேடுகள், ஆவணங்கள் என்பவற்றை இற்றைப்படுத்திப் பேணுதல்.
- பாடசாலையின் தரவுத்தளத்திற்குப் பொறுப்பாயிருத்தல்.
- வருடாந்த பொருட்கணக்கேட்டுக்குப் பொறுப்பாயிருத்தல்.
- பாடசாலையின் பௌதிக வளம்,ஆசிரியர் தேவைகளை கணித்தல் * மேற்பார்வைப் பணியில் ஈடுபடல்.
- கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பட்டியலைப் பெறல்
- இலவசப் பாடநூல்,இலவசச்சீருடை, போசாக்குணவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாயிருத்தல்.
- வருடாந்த விளையாட்டுப்போட்டி, செயற்பட்டு மகிழ்வோம், பாலர் விளையாட்டுப்போட்டிகளை நடாத்துதல்.
- ஆசிரியர்லீவு, கல்விசாரா ஊழியர்களின் லீவுக்குப் பொறுப்பாயிருத்தல்.
- பாடசாலை நிதிக்கணக்குகளைக் கண்காணித்தல்,காலாண்டு அறிக்கையிடல்.
- மாணவர் தலைவர் பணிகளைக் கண்காணித்தல்.
பிரதி அதிபர் (பாடவிதானம்) கடமைப் பொறுப்புக்கள்
- அதிபர்,பிரதி அதிபர் பணியில் இல்லாதபோது பாடசாலைப் பொறுப்புக்களை ஏற்றுச் செயற்படல்.
- பாடசாலை நிருவாகத்திற்கும்,முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.
- சுற்றுநிருபத்திற்கு ஏற்ப பாட ஒதுக்கீட்டுடன் நேரசூசியைத் தயாரித்து வழங்குதல் பதில் கடமை ஒழுங்குகளை மேற்கொள்ளல்.
- ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஏற்ப கற்பிக்கும்,கற்பிக்கக்கூடிய பாட விடயங்களைப் பேணல்.
- நாளாந்தக் கற்பித்தலுக்காக ஆசிரியர்களின் முன்னாயத்தைக் கண்காணித்தல், மேற்பார்வை செய்தல்
- ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி,பாடத்திட்டம்,பாடக்குறிப்பு என்பன முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தல்.
- தரவட்டங்களை அமைத்து அதன் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.
- ஆசிரியர்களுக்காக ஒழுங்கு செய்யப்படும் கருத்தரங்கு, செயலமர்வுகளில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்குதல்.
- ஆசிரியர் வாண்மைவிருத்தி SBOTD திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் வழிகாட்டுதல்.
- பரீட்சைப் பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்து அடைவுமட்டஅதிகரிப்பினை நோக்காகக் கொண்டு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- வகுப்பறைக் கவிந்நிலையை மேம்படுத்தல் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- மாணவர் நலன்சார் நலன்புரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் சமூகமட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்.
- பாடப்பதிவுப் புத்தகங்களை முறையாகப் பரிசீலித்து ஒப்பமிடல்.
- பாடசாலைமட்டக் கணிப்பீட்டு முன்திட்டங்களை ஆசிரியர்களிடமிருந்து பெறல். மேற்பார்வை செய்தல்.
- ஸ்மார்ட் வகுப்பறை,நவீன கற்பித்தல் நுட்ப வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல்.
- பெற்றோர் கலந்துரையாடல்கள் மூலம் மாணவர்களின் பாட,இணைப்பாடவிதான விருத்திக்கு உதவுதல்.
- பொதுப்போட்டிகளில் அனைத்து மாணவர்களும் பங்குபற்ற சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல்.
பகுதித் தலைவர்களுக்கான பொதுவான பணிகள்
- தமக்குப் பொறுப்பளிக்கப்பட்ட பகுதி நிருவாகத்திற்கு அதிபர் சார்பாகப் பொறுப்பாக இருத்தல்.
- தமது பகுதிக்குரிய நேரசூசியைப் பேணுதலும் நடைமுறைப்படுத்தி மேற்பார்வை செய்தலும்.
- பகுதிக்குரிய ஆசிரியர்கள் பற்றிய முழுமையாகப் பேணுதல்.
- உரிய பகுதிக்குரிய தரவட்டங்களை அமைத்து இயங்கச் செய்தல்.
- பகுதிக்குரிய ஆசிரியர்களின் கற்பித்தலுக்கான முன்னாயத்தங்களை நாளாந்தம் கண்காணித்தலும், உறுதிப்படுத்தலும்.
- கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- ஆசிரியர் வாண்மைவிருத்தித் தேவைகளை இனங்கண்டு திட்டமிட்டு வழிகாட்டல்களை ஒழுங்கு செய்தல்.
- ஓய்வு வேளைப் பதிலொழுங்குகளை முறையாக மேற்கொள்ளல்.
- வகுப்பறைக் கவிந்நிலையைப் பேணி கற்றலுக்கான மகிழ்ச்சிகரமான சூழலைப் பேண வழிகாட்டுதல்.
- கற்றல் கற்பித்தல் பணிகளை முறையாக மேற்பார்வை செய்தல். முழுமையான மாணவர் விபரங்களைப் பெற்று.
- மாணவர் நலன்புரி விடயங்களுக்காக நிருவாகத்திடம் கையளித்தல்.
- மதிப்பீடு,கணிப்பீடு முன்னாயத்தத்தை கண்காணித்தல் நடைமுறைப்படுத்துதல். மேற்பார்வை செய்தல்.
- தமது பகுதிக்கான பௌதீகவளப் பட்டியலைப் பேணல், குறைபாடுகளை இனங்கண்டு முகாமைத்துவத்தினூடாக தீர்வு பெற்றுக்கொடுத்தல்.
- பெற்றோர் சந்திப்புக்களை ஒழுங்குசெய்து நடாத்துதல்.
- இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மாணவர்களை முழுமையாக ஈடுபடச்செய்தல்.
0 கருத்துகள்