ஒரு பணக்கார தந்தை தன் மகனுக்கு ஏழ்மையை விளக்க அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்து சென்றார். ஒரு வாரம் அங்கே தங்கி இருந்த பின் வீடு திரும்பினார்கள் வீடு வந்ததும் தந்தை மகனை பார்த்து மகனே அந்த கிராமத்தில் நீ என்ன பார்த்து தெரிந்து கொண்டாய் என்று கேட்க
அதற்க்கு அவன் அப்பா நாம் கோட்டை போன்று வீடு கட்டி நான்கு மதில் சுவற்றுக்குள் அடை பட்டு சிறை வாழ்க்கை வாழ்கிறோம் நாலுக்கு நாள் கூரை வீட்டில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக அவர்கள் வாழ்கிறார்கள் மின் விசிறி , ஏசி என்று இருந்தாலும் உஷ்ணத்தில் நாம் வாழ்கிறோம் இயற்கையான காற்றில் அவர்கள் வாழுகிறார்கள்.
சூப்பர் மார்க்கெட் சென்று என்றோ பறித்த காயை விலை கொடுத்து நாம் வாங்கு கிறோம் அவர்களோ அவர்களுக்கு தேவையானவற்றை விளைவித்து சாப்பிடுகிறார்கள் ,மூன்று வேலை வயிறார உண்டு உடல் இளைக்க காலாற நடந்தும் நோயுடன் நாம் வாழ்க்கை நடத்துகிறோம்.
கால் தேய தினம் உழைத்து அரைவயிறு கஞ்சி குடித்து ஆரோக்கியமாக அவர்கள் வாழ்கிறார்கள். இதுமாதிரி அவர்கள் நிறைய விஷயங்களில் மிகவும் செல்வந்தர்களாக இருக்க்கிறார்கள் இப்பொழுது தான் புரிந்தது புரிந்தது நாம் ஏன் இவ்வளவு ஏழையாக இருக்கிறோம் என்று இதை கேட்ட அப்பா வாயடைத்து போனார்.
0 கருத்துகள்