ஆசிரியர் (TEACHER)|ஆசிரியர் எனப்படுபவர் யார்?



ஆசிரியர் (TEACHER)

மாணவர் ஒருவரின் ஏதாவது கற்றல் படிமுறையில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட கற்றல் தேர்ச் சிகளை மாணவனிடத்தே ஏற்படுத்த இயலுமை உள்ளவரை ஆசிரியர் என அழைக்கலாம்.

ஆசிரியர் வசதிகளை வழங்குபவர்.

ஆசிரியர் வழிகாட்டுபவர்.

ஆசிரியர் உதவியளிப்பவர்.

ஆசிரியர் தாய் அல்லது தந்தை போன்றவர்.

ஆசிரியர் மருத்துவரைப் போன்றவர்.

ஆசிரியர் நண்பன் அல்லது நண்பி ஆவார்.

ஆசிரியர் சமூகத்தை சீர்திருத்துபவர் ஆவார்.

ஆசிரியர் கலாசாரத்தை ஒப்படைப்பவர்.

ஆசிரியர் மாணவரிடத்தே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துபவர்.

ஆசிரியர் மாணவரிடத்தே அறிவு. திறன், மனப்பாங்கு, பழக்கங்களை ஏற்படுத்துபவர்.




21ம் நூற்றாண்டின் ஆசிரியரின் பண்புகள் -

பிரதிபலிப்புச் செய்பவர், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் கூட்டாகச் செயற்படுதல், புதிய தொழில்நுட்ப சாதனங்களுடன் பரீட்சயமடைதல், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல், மாணவர்களின் தேவைக்கேற்ப கற்பித்தல், முன்மாதிரி மிக்கவராக இருத்தல் - வழிநடத்துதல்.நல்லாசிரியரின் பண்புகள்

அதிபரோடு மிகக் கூடியளவு ஒத்துழைத்தல்ஏனைய ஆசிரியர்களோடு கூடியளவு ஒத்துழைத்தல்மாணவர்களுக்கு சிறந்த ஆலோசகர்தினமும் கற்பிக்க ஆயத்தம் செய்பவர் , தம் தொழில்சார் திறன்களை மேம்படுத்துபவர்பாடசாலைக்காகவும் மாணவர்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர் , புதியவற்றை நாடி அதற்கேற்ப மாறுபவர்மாணவர்களுக்கு உதவுவதில் கலைப்படையாதவர்.

பாடத்துக்குப் புறம்பான செயற்பாடுகளில் நன்கு ஈடுபடுபவர், சமூகத்துடன் கூடிய தொடர்புகளை கொண்டிருப்பவர்உடல் பலம் மிக்கவர், அபார துணிச்சல் உடையவர் , பொறுப்புணர்வு மிக்கவர்தயக்கமின்றி தொடங்கும் ஆற்றல் மிக்கவர்தீர்மானம் எடுக்கும் ஆற்றல் மிக்கவர்நேர்மையானவர், பக்கம் சாராதவர்.

வாண்மைத் தொழில் (Teaching Professional)

வளர்ச்சியடைந்த சமூக அமைப்பில் ஆசிரியர்கள் வாண்மையாளர்களாகக் கருதப்படு கின்றனர். வாண்மையாளர் எனப்படுவோர், தாம் மேற்கொள்ளும் தொழிலின் தத்துவ அடிப்படை களையும், அதனுடன் இணைந்த வகையில் செயன்முறைப் பயிற்சிகளையும், சுலபமா கத் தமது தொழில் சார்பான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் வல்லமை பெற்றிருப்பர், உயர் தொழில் நடைமுறைகளில் தேர்ச்சிக்கான வகை சொல்பவர்களாக இருப்பார் கள் .


ஆசிரியர் தொழில் பற்றிய சர்வதேச செல்நெறி

ஆசிரியர் தொழிலுக்கு வருவோரின் நுழைவுத் தகுதியை அதிகரித்தல்.

தகுதி வாய்ந்தவர்களை ஆசிரியர் பதவிக்கு அமர்த்துதல்.

ஆசிரியர் கல்விக்கான நெறிமுறைகளைத் திருத்தியமைத்தல், முகாமைத்துவ தேர்ச்சிகளைக் கட்டாயமாக்குதல்.

புதிய கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த ஊக்குவித்தல்.

திறன் அடிப்படையிலான ஆசிரியர் கல்விக்கான கலைத்திட்டம்.

ஆசிரியருக்கான தொடருறு கல்வி.

ஆசிரியர் தராதர மேம்பாடு.


ஆசிரியர் ஒழுக்க விழுமியம் (TECHERS ETHICS)

ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை மற்றும் பொதுச் சட்டத் தொகுப்பு (Code and System of Ethics on the Moral conduct of Teachers- Ministry Of Education Circular No-2012/37)

சகல பிள்ளைகளிடமும் இருக்க வேண்டிய பண்புசார் கல்வியினைப் பெற்றுக் கொள்வ தற்கான அடிப்படை உரிமையினைப் பாதுகாக்கக் கூடியவாறு சிறுவர் உரிமைக் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப உரிய சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர் களது ஆளுமை விருத்திக்குப் பங்களிப்புச் செய்வது சகல ஆசிரியர்களதும் பொறுப் பாகும்.

ஆசிரியர்கள் (சட்ட ரீதியான யோசனைகளின் படி) இடம்சார் பெற்றோர்கள் ஆவர். (Loco - Parents)

தொழில்சார் உயர் தரத்தினை உறுதி செய்யக் கூடியவாறு தொழில் கௌரவத்தை உறுதி செய்யும் வகையில் ஒழுக்க நெறிகள் தம்மால் தயாரிக்கப்பட்டுப் பின்பற்றப்படுவது தொழில்சார் தரத்தின் தேவையாகக் கருதப்படுகின்றது.

ஆசிரியர் ஒழுக்க நெறிக் கோவையானது ஆசிரியத் துவத்தை, ஆசிரியரை மதிப்பிடும் கருவியாகவும் பயன்படுத்தப்படும்.

ஆசிரியர் தொழில் ஓர் உயர் தொழிலா?

சட்ட வல்லுனர்கள், மருத்துவத் துறை சார்ந்த வைத்தியர்கள், கட்டிடக் கலை நிபுணர் கள், நவீன தொழில்நுட்ப வல்லுனர்கள், கணக்கியலாளர் போன்றோர் உயர் தொழி லுக்குரிய இயல்புகள் பலவற்றைக் கொண்டிருப்பதால் உயர் தொழில் அந்தஸ்து உடையோராகக் கருதப்படுகின்றனர்.

ஆசிரியர்கள் உயர் தொழிலுக்குரிய சில இயல்புகளில் குறைந்து காணப்படுகின்ற போதிலும் ஆசிரியர் ஏற்றுக்கொள்ளும் சமூக வகிபங்குகளினால் ஆசிரியர் தொழிலை ஓர் உயர் தொழிலாக கருதுதல் வேண்டும் என்ற வாதமும் உண்டு.

உப உயர் தொழில் ஒன்றுக்கான சில நியதிகளின் படி ஆசிரியர் தொழிலின் அதற்குரிய பண்புகள்

குறைந்த தொழில் அந்தஸ்தினைக் கொண்டிருத்தல்.

குறைந்த பயிற்சிக்காலம்.

சமூக ஏற்புடைமை குறைவு.

குறைவான விசேடத்துவமும் நன்கு விருத்தி அடையாத அறிவு மற்றும் திறன் அமைப் பைக் கொண்டிருத்தல்.

நடைமுறைகளுக்கான கொள்கைசார் மற்றும் எண்ணக்கருசார் அடிப்படைகளின் வலியு றுத்தல் குறைவு.

வேலை செய்யும் நிறுவனத்துடன் அடையாளப்படுத்தல் எனும் போக்கில் கூடுதலாக வும் தொழிலில் குறைவாகவும் ஆர்வம் காட்டுதல்.

நிருவாகம், மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடு என்னும் விடயங்களுக்கு கூடுதலாக உட்படுதல்.

தொழில் பற்றிய தீர்மானம் மேற்கொள்வதில் குறைந்த சுதந்திரம். உயர் தொழிலுக் கன்றி உயர் உத்தியோகத்தர்களுக்கு வகைசொல்பவர்களாக இருத்தல்.

ஓர் உயர் தொழிலுக்குரிய பண்புகள்

உயர் தொழில்கள் தொழில் ரீதியான தொடர்புகளைக் கொண்ட சமூக நிறுவனங்க ளாகும். இவை தனியாட்களுக்கும் சமூகத்திற்கும் அத்தியாவசியமான சேவைகளை வழங்கும் வழிமுறையாகவும் விளங்குகின்றன.

ஒவ்வொரு உயர் தொழிலும் தமக்கென இனங்கண்டு கொண்ட தேவைகளை அல்லது தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கும்.

உயர் தொழிலானது கூட்டாகவும் தனியாகவும் அறிவு, திறன், மனப்பாங்குகளை உள் ளடக்கிய அமைப்பைக் கொண்டிருக்கும்.

உயர் தொழில் ஒன்றின் உறுப்பினர்கள் தமது சேவை பெறுநரின் நன்மை கருதிய தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்கேற்பர்.

உயர் தொழிலானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிகாட்டற் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதுடன் அடிப்படையில் தனக்குரிய பிரயோக அறிவையும் திறனையும் கட்டியெழுப்பும்.

உயர் தொழிலுக்கு ஒன்றுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட உயர் தொழிற் சங்கங்கள் இருக்கும்.

உயர் தொழிலொன்று அதற்குரிய உயர் தொழில் தராதரத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயற்படும்.

குறிப்பிட்ட தொழிலில் பொதுமக்களின் நம்பிக்கையை உயர்மட்டத்தில் பெற்றிருக்கும். தொழில் தேர்ச்சி குறித்து வலுவான சேவைசார் ஊக்கலையும் வாழ்க்கைக்கால ஈடு பாட்டினையும் கொண்டிருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்